(க.கிஷாந்தன்)
நோர்வூட் தோட்டம் சின்ன தரவளை பிரிவில் உள்ள வீடொன்றின் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பாகம் சேதமடைந்துள்ளது.
நோர்வூட் தோட்டம் சின்ன தரவளை பகுதியில் 05.08.2015 அன்று விடியற்காலை 4.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பாறை சரிந்து வீழ்ந்தபோது வீட்டுக்குள் இருந்த 2 பெண்களும், 2 சிறுவர்களும், 1 குழந்தையும் வீட்டினூள் இருந்துள்ளனர். எனினும் இவர்கள் இறை அருளால் உயிர் தப்பியுள்ளனர்.
மலையகத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.