GuidePedia


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த வாரம் 3 மற்றும் 5ம், 6ம் திகதிகளில் இடம்பெற்றது. 


இந்தநிலையில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 11ம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. 



இம்முறை தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இரண்டு கட்டமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 



இதன்படி 3ம் திகதி ஆசிரியர்கள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தினரும் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் ஏனைய அரச உத்தியோகத்தர்களும் வாக்களித்திருந்தனர்.



 
Top