GuidePedia

பொதுத் தேர்தலில் குறைந்தது 30 ஆசனங்களையாவது கைப்பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வேண்டும் என்ற மக்கள் விடுதலை முன்னணியின் கனவு கலைந்து போயுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் அந்த கட்சியின் வெற்றிக்காக பாரிய பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் அந்தக் கட்சி மேற்கொண்ட பிரசாரம் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த பிரசாரத்தின் மூலம் பலன் கி்டைக்காத நிலையில், மக்கள் விடுதலை முன்னணிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
குறைந்தது 30 ஆசனங்களை எதிர்பார்த்திருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கு தேர்தல் முடிவுகளின்படி 7 முதல் 8 ஆசனங்களே கிடைக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் பற்றி கட்சியின் தலைவர் தெரிவித்த கருத்து,
இம்முறை பொது தேர்தலில் இதனை விட சிறப்பான முடிவினை எதிர்பார்த்தோம் என மக்கள் விடுதலை முன்னணி தலைவர்இ கொழும்பு மாவட்ட வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கிடைத்த முடிவினை விடவும் அதிகமான ஒரு தேர்தல் முடிவினை நாங்கள் எதிர்பார்த்தோம் எனினும் நாங்கள் எதிர்பார்த்தவை எங்களுக்கு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
எனினும் கிடைத்த ஆசனங்களை கொண்டு முடிந்த அளவு நாட்டிற்கு சிறப்பானவைகளை மேற்கொள்வோம் என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.



 
Top