GuidePedia

(க.கிஷாந்தன்)
வேன் ஒன்றில் இருந்து நுவரெலியா மாவட்டத்தில் சுயட்சைக்குழுவில் பிரஜைகள் முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படமும், விருப்பு இலக்கங்களும் பொறிக்கப்பட்ட கலண்டர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வேனில் கலண்டர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக கொண்டு செல்லும் போது இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு மேற்படி வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பிலிருந்து மஸ்கெலியா லக்கம் தோட்டம் நோக்கி சென்ற போது மஸ்கெலியா லக்கம் பகுதியில் பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து 12.08.2015 அன்று மாலை வேளையில் குறித்த வேனை பரிசோதனை செய்யும் போது இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டு சென்ற கலண்டர்களை கைப்பற்றியுள்ளனர்.

இதில் பெரியளவிலான கலண்டர்கள் 176 மற்றும் சிறியளவிலான கலண்டர்கள் 773ம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பு மாகந்துர பகுதியையும் இருவர் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவராவர்கள் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்த சந்தேக நபர்கள் மூவரையும் 13.08.2015 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.






 
Top