GuidePedia

இந்தியா- இலங்கை வாரியத்தலைவர் லெவன் அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதல் போட்டி வரும் 12ம் திகதி தொடங்குகிறது.
இதற்கு முன் இலங்கை வாரியத்தலைவர் லெவன் அணிக்கு எதிராக மூன்று நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் முதல் இன்னிங்சில் ரஹானே (109) சதம் அடித்தார். தவானும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணித்தலைவர் கோஹ்லி (8) சொதப்பினார்.
வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரையும் வியக்க வைத்தார். இதனால் இலங்கை வாரியத்தலைவர் லெவன் அணி 121 ஓட்டங்களில் சுருண்டது.
பின்னர் 2வது இன்னிங்சில் இந்திய அணி 180 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதில் புஜாரா (31), ராகுல் (47) சிறப்பாக விளையாடினர்.
இலங்கை வாரியத்தலைவர் லெவன் அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்கள் எடுத்திருந்த போது போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது.
இதில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுஷால் சில்வா ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களும், தரங்கா 52 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக செயல்பட்டு மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.



 
Top