GuidePedia

நியூயார்க், கூகுள் நிறுவனத்தின் மறுசீரமைப்பாக, உருவாக்கப்படும் ‘அல்பபெட்’ நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ், புதியதாக ‘அல்பபெட்’  நிறுவனத்தை அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். புதிய தேடுதல் நிறுவனத்திற்கு சுந்தர் பிச்சை தலைமை அதிகாரியாக செயல்படுவார் என்று தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக பேஜ் வெளியிட்டு உள்ள பிளாக் தகவலில், ‘அல்பபெட்’  நிறுவனத்திற்கு சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை செயல்படுவார். கூகுள் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் செர்ஜி பிரின் அதன் தலைவராக இருப்பார் என்று குறிப்பிட்டு உள்ளார்.

பேஜ் வெளியிட்டு உள்ள தகவலில், “எங்களுடைய நிறுவனம் இன்று நன்றாக செயல்பட்டு வருகிறது, இருப்பினும் நாங்கள் இதனை தெளிவாக்கவும், மேலும் பயனுள்ளதாகவும் உருவாக்கவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். எனவே நாங்கள் புதிய கம்பெனியை உருவாக்குகிறோம். நிறுவனம்  ‘அல்பபெட்’ என அழைக்கப்படும். புதிய நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக தற்போது கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பை வகித்துவரும் சுந்தர் பிச்சை செயல்படுவார்.” என்று தெரிவித்து உள்ளார். நிறுவனத்திற்காக சுந்தர் பிச்சையின் செயல்பாடு மற்றும் அர்ப்பணிப்பு செர்ஜியையும் என்னையும் மிகவும் உற்சாகபடுத்தி உள்ளது என்றும் பாராட்டு தெரிவித்து உள்ளார். 

சுந்தர் பிச்சை புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவார் என்று எனக்கு தெரியும் என்றும் லாரி பேஜ் தெரிவித்து உள்ளார். 

சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்தவர். அதன் பிறகு ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். 2004-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், ஆண்ட்ராய்ட், கூகுள் குரோம் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்துக்கொள்கிறார். கூகுள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு மெக்கென்சி நிறுவனத்தின், சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டாக இருந்திருக்கிறார்.



 
Top