GuidePedia

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறை ஏற்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளரும் 'பொதுஜன பெரமுன' வின் வேட்பாளருமான கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 8ம் திகதியன்று வெலிப்பன பொலிஸ் பகுதியில் பொலிஸ் அனுமதியின்றி கோயில் ஒன்றுக்குள் பிரசாரக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இது தேர்தல் சட்டத்தை மீறும்செயலாகும் என்று சுட்டிக்காட்டிய போது ஞானசார தேரர், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து மத்துகம நீதிவானின் உத்தரவின் பேரில் ஞானசார தேரர் விசாரணை செய்யப்படவுள்ளார்.



 
Top