முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் இந்நாள் பாராளுமன்ற வேட்பாளருமான ஆப்தீன் எஹியா ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான கெளரவ ரணில் விக்கிரமசிங்க மற்றும் இவருக்கும் இடையில் இன்று (03-08-2015) அவரது இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே அவர் அக்கட்சியில் இணைந்து கொண்டார்.
இதனையடுத்து ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வெற்றிக்கு உழைக்கவுள்ளதாக உறுதிமொழி வழங்கியுள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு மாகாண சபை சென்ற இவர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அண்மையில் சுயேட்சை கட்சி ஒட்டக கூட்டணியில் இணைந்து பிரசாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது.