GuidePedia

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
வசந்தம் தொலைக்காட்சியில் நாளை வெள்ளிக்கிழமை(14) இரவு 10.00 மணிக்கு நடைபெறும் “அதிர்வு” நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் பங்கேற்கின்றார்.
சமகால அரசியல் நடப்புக்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எதிர்கால மக்கள் பணிகள் மற்றும் தேர்தல் காலத்தில் மக்கள் காங்கிரஸ் எதிர்நோக்கி வரும் சவால்கள் குறித்து இந்த நிகழ்சியில் அவர் விளக்கமாக எடுத்துரைப்பார் என நம்பப்படுகிறது.
வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் போட்டியிடுகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 



 
Top