GuidePedia

மஹிந்த ஆட்சியில் பதவி வகித்த காலத்தில் ஏன் புதிய நாடு ஒன்றை உருவாக்கவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவினால் பத்து ஆண்டுகளில் செய்ய முடியாத மக்கள் சேவையை நாம் 100 நாட்களில் செய்துள்ளோம்.
தற்போது புதிய நாட்டை உருவாக்கப் போவதாகவும், சந்தர்ப்பம் வழங்குமாறும் மஹிந்த கோரி வருகின்றார்.
ஆட்சியில் இருந்த காலத்தில் ஏன் அந்த புதிய நாட்டை உருவாக்கவில்லை.
சுயலாப ஆட்சியே நடத்தப்பட்டது, அப்பாவி மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்கப்படவில்லை.
இவ்வாறான நபர்கள் மீளவும் ஆட்சிப் பொறுப்பினை கோருவது நகைப்பிற்குரியது.
மஹிந்த தரப்பு செல்வந்தர்களாக மாறியது, மக்கள் வறுமையில் வாடினார்கள்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்.
மக்கள் வாழ்வதற்கு இலகுவான தீர்மானங்களை எடுக்குமாறே பிரதமர் ரணில் விக்ரமசிங்க எல்லா சந்தர்ப்பங்களிலும் எமக்கு ஆலோசனை வழங்குகின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஒரே மாதிரியாகப்படுகின்றது.
கடந்த கால ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்களின் ஆட்சியை கவனித்தால் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது, கோல்டன் கீ வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் காணப்பட்டது அதற்கு தீர்வு பெற்றுக் கொடுத்தோம் என ரவி கருணாநாயக்க தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.



 
Top