GuidePedia

(க.கிஷாந்தன்)

மலையக மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸே பெற்றுக்கொடுத்துள்ளது. இன்று இவ்வாக்குகளை பெற்று சுபபோக வாழ்க்கையை நடத்துவதற்காக சில மலையக அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் போட்டியிடும்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம் 12.08.2015 அன்று தலவாக்கலை ஒலிரூட் தோட்ட பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்…

மலையக மக்கள் வாக்குரிமை அற்றவர்களாகவே இருந்துள்ளார்கள். இம்மக்களின் வாக்குரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் பல முயற்சிகள் செய்ததன் காரணமாகவே இவர்களுக்கான வாக்களிக்கும் உரிமை கிடைக்கப்பெற்றது.

இன்று யார் யாரோ மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறி கொண்டு மக்களின் வாக்கு பலத்தை பெற்றுக்கொண்டு பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என கனவு காண்கிறார்கள்.

ஆனால் மலையக மக்கள் தெளிவானவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை ஒரு போதிலும் வீழ்த்த நினைத்ததில்லை. நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சக்திப்படுத்தியது மலையக மக்கள் ஆகும்.

எத்தனை பேர் போட்டிப்போட்டாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 75 வருட காலமாக இம்மக்களின் தேவைகளையும், அபிவிருத்தியையும் சிந்தித்து செயல்ப்பட்டதன் காரணமாக இன்று மக்கள் ஒரளவுக்காவது நிம்மதியாக வாழ்கின்றார்கள்.

அத்தோடு சுகாதார வசதி, கல்வி, போன்ற ஏனைய அபிவிருத்திகள் மலையகத்தில் இடம்பெற்றதுக்கு காரணமாக இருந்தது எங்களுடைய அரசியல் பலமாகும்.

மக்கள் மத்தியில் சிலர் பொய்யான பிரச்சாரங்களை செய்து மக்களுடைய வாக்குகளை சுபிகரிக்க பார்கின்றார்கள்.

அத்தோடு தேர்தல் காலங்களில் மக்களை பகடகாய்களாக நினைத்து சிலர்  அப்ப சொற்ப சலுகைகளை கொடுகின்றார்கள். இது நீண்ட காலத்திற்கு அல்ல. தேர்தல் காலத்தில் மட்டுமே வழங்குவார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொருத்த வரையில் உரிமைகளோடு போராடுவதை தவிர சலுகைகளுக்காக போராடியது அல்ல.

இன்று தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்த போதிலும் தேர்தல் காலம் என்பதால் அதனை ஒத்தி வைக்க வேண்டிய நிற்பந்தம் வேண்டியுள்ளது.

ஆனால் 1992ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கத்திடமிருந்த தோட்டங்களை கம்பனி பொறுப்பேற்ற பின்னர் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு நொடியில் கூட மக்களுக்கு துரோகம் விளைவித்ததில்லை.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் போதெல்லாம் நாங்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் போராடி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்திருக்கின்றது.

இம்முறையும் பேச்சுவார்த்தையின் போது 1000 ரூபா வாங்கி தருகின்றோம்  என கூறியது தவறு என சில அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகின்றார்கள்.

ஆனால் அவர்களினால் ஒரு ரூபா சரி பெற்றுக்கொடுக்க முடிந்ததா அல்லது கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துருக்கின்றார்களா என்பதினை மக்கள் நன்கு உணர்ந்திருகின்றார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடுமையாக கம்பனியுடன் போராடி கொண்டிருப்பதோடு சில மலையக அரசியல்வாதிகள் இ.தொ.கா 1000 ரூபா பெற்றுத்தராவிட்டால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பதாக தெரிவிக்கின்றார்கள்.

ஆனால் அவர்களால் பேச மட்டுமே முடியும் செயல்பாட்டில் செய்ய முடியாது. இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மட்டுமே இதனை செய்ய முடியும்.

எனினும் நடைபெறவுள்ள தேர்தலில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என இதன்போது அவர் தெரிவித்தார்.



 
Top