GuidePedia

தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்த பின்னர், தேர்தல் விதிகளை மீறி பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் குறிப்பிடுகின்றார்.
தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
மேலும் பொலிஸ் ரோந்து சேவைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் கண்காணிப்புப் பிரிவினரின் உதவியுடன் அந்தந்த பொலிஸ் பிரிவுகளில் சட்டத்தையும், ஒழுங்கையும் பேணுவதற்கு பொலிஸார் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த திடீர் சுற்றிவளைப்புகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன், சட்டமீறல்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நீதியானதும், நியாயமுமான தேர்தலை நடத்துவதற்கு சட்ட வரம்பிற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பொலிஸ் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.



 
Top