GuidePedia

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான கொழும்பு – கண்டிக்கான நெடுஞ்சாலையின் கட்டுமானப்பணிகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சமன் பண்டார தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டப் பணியாக கடவத்தையிலிருந்து மீரிகமை வரையிலான அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மீரிகமை-குருநாகல், குருநாகல்-கண்டி என்று இந்த கட்டுமானப்பணிகள் தொடரும் என்றும் குருநாகலில் இருந்து தம்புளை வரையிலான நெடுஞ்சாலையும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



 
Top