GuidePedia

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் தொழில் வழங்குவதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பணம் வழங்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தன்னிடம் முறையிடுகிறார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்கும் தொழில் பெற்றுக் கொடுப்பதற்காக இலட்சக்கணக்கில் இலஞ்சம் பெறுவதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திகாமடுல்லையில் இடம்பெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது தேர்தல் இலாபங்களுக்காக இனவாதத்தை தூண்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.



 
Top