GuidePedia

(எம்.எம்.ஜபீர்) 
தேசிய போதை ஒழிப்பு வேலைத்திட்டம் பொத்துவில் பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிக்கும் நோக்கில் பொத்துவில் பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஒழிப்பு விழிப்பூட்டல் பேரணி பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸர்ரத் தலைமையில் நேற்று நடைபெற்றது.

விழிப்பூட்டல் பேரணி பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி பொத்துவில் நகர் மற்றும் அறுகம்பை பிரதான வீதியூடாக பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.

போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம், மதுவை ஒழிப்போம் புகையை அழிப்போம், வாழ்வை வளர்ப்போம், புகைப்பவர்களுக்கு அருகில் உள்ளவர்கள் புகைப்பவர்களைவிட அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் போன்ற வாசகங்கள் மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.

போதைப் பொருள் பாவனையை முற்றாக நாட்டில் இருந்து இல்லாமல் செய்வதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் பிரகாரம் 2015.07.09 முதல் 2015.08.08 வரை போதைப் பொருள் தடுப்பு மாதமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் என்.கிருபாகரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், திவிநெகும உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சுகாதர வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகதர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



 
Top