(க.கிஷாந்தன்)
ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் இணைந்து பதுளை-அட்டாம்பிட்டிய பகுதியில் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்வின்போது, ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் இருவரது ஏற்பாட்டில், 07.08.2015 அன்று வெள்ளிக்கிழமை இரவு அட்டாம்பிட்டிய நகரில் பிரசார கூட்டமும் இசை நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கலந்துக்கொள்ள வந்த இரு தரப்பு ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது.
இதன்போது, பீ.எம்.இசாரஉதயங்க என்ற 18வயதுடைய இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபரை அட்டாம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் பொலிஸார் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன் அப்பகுதியின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.