அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனின் சிந்தனைகள் ஜனாதிபதி மைத்திரியின் மூளைக்கே சென்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் தலையில் முடி இல்லாததனால் இது இலகுவாகியுள்ளது என பொதுபல சேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் ரிஷாட் மஹிந்தவுடன் இருந்து அவரது வேலைகளை சாதித்தார். தற்பொழுது இந்த அரசாங்கத்தில் இணைந்து வில்பத்து காட்டை அழித்து வருகின்றார் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.
