GuidePedia

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி அங்கு வாழும் மவுரி பழங்குடி மக்களை சந்தித்துள்ளார்.
பிரித்தானிய இளவரசர் ஹரி தனது பயணத்தின் 6-வது நாளான இன்று நியூசிலாந்தின் மூத்த பழங்குடி மக்களைச் சந்தித்துள்ளார்.
பழங்குடி மக்களின் போர் நடனக்கலையை கற்றுக் கொண்ட ஹரி, மவுரி மக்களின் பாரம்பரிய வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
அப்போது ஹரிக்கு அவர்கள் தங்கள் கைகளால் செய்யப்பட்ட துடுப்பு ஒன்றை பரிசளித்தனர்.
பிரித்தானிய இளவரசர் என்றாலும் பழங்குடி மக்களின் வழக்கப்படி அவர்தான் துடுப்பு போட வேண்டும்.
எனவே, வாங்கனய் ஆற்றில் 40 நிமிடங்கள், பழங்குடி மக்களுடன் துடுப்பு போட்டு பயணித்துள்ளார்.
இந்த பயணம் முடிந்ததும் “நான் சுக்கு நூறாக உடைந்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், அவர்களிடமிருந்து விடைபெறும்போது அவர்கள் வழக்கப்படியே முகத்தோடு முகத்தை நேருக்கு நேராக இணைத்து மூக்கும் மூக்கும் உரசும்படி ஹரி விடைபெற்றுள்ளார்.
ஆனால் மவுரி பழங்குடி மக்களைப் போல் முகத்தில் சாயம் பூசிக்கொள்ள மட்டும் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



 
Top