காலத்துக்கு காலம் மீடியாக்கள் ஏதாவது ஒரு விடயத்தை பிடித்து அதனை ஊதி ஊதி பூதாகரமாக்கி தங்களைப் பிரபல்யப்படுத்திக் கொள்வதை காண முடிகின்றது. அந்த வகையில் இன்று மீடியாக்களில் அதிகம் பேசப்படக்கூடிய விடயமாக வில்பத்து விவகாரம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இன்று காலையில் சகோதர இணையத்தளமாக “http://madawalanews.com” அவா்களின் உதவியுடன் ஒரு செய்தியை கீழ்வரும் https://www.youtube.com/watch?v=cy8-pmd0ukU இணைப்பிலிருந்து காண முடிந்தது.
இலங்கைப் பெரும்பான்மையிரால் வழிநடாத்தப்படும் நெத்.FM. எனும் வானொலி வில்பத்து பிரதேசத்தில் வித்தியாசமான உடையணிந்த புமையான மொழிபேசும் முஸ்லிம்கள் இருப்பதாக சித்தரித்து காணொலியொன்றை வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோவை இதுவரைக்கும் 1000 போ் அளவில் பார்வையிட்டுள்ளார்கள்.
இவ்வாறு முஸ்லிம்கள் அங்கு சட்ட விரோதமாக குடியேற்றப்படுகின்றார்கள். பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசம் போன்ற நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பிரமொழி பேசும் என்றவாரு போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
இவ்வாறு பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளவா்கள் எமது உடன்பிரவாக சகோதரா்கள். அசாத் சாலி அவா்கள் பாசையில் சொல்வதாயின் ”நாங்கள் எல்லாம் முஸ்லிம்கள். கலிமாச் சொன்ன மக்கள்”. இவ்வாறு கலிமாச் சொன்ன மக்கள் 1990ம் ஆண்டு 3 மணித்தியாலங்களில் தங்களது சொந்த இடங்களிலிருந்து பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கபட்டவா்கள் தான் தற்போது நிலைமை ஓரளவுக்கு சீராகிய பிற்பாடு மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு மீள் குடியமா்ந்து வருகின்றார்கள் என்பதை மீடியா, மீடியாவாக கூட்டம் கூட்டம் கூட்டமாக அமைச்சா் றிஷாத் பத்தியுத்தீன் மட்டும் தான் கத்தி வருகின்றார்.
ஆனால் முஸ்லிம்களை பிரதானமாக பிரதிபிலக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் காங்கிரஸ் ஆனது இந்த விடயத்தில் மௌனம் காப்பது ஏன்?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்று பெயரை மட்டும் வைத்துக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்கள் தான் இலங்கை முஸ்லிம்கள் என்று கருவதனாளா? அவ்வாறு நீங்கள் கருதியதன் விளைவாகத் தான் கரையோர மாவட்டம், கரையோர மாவட்டம் என்ற ஒன்றை தூாக்கிப் பிடித்துக் கொண்டு கடந்த ஜனாதிபதித் தோ்தலில் தபால் வாக்குகளில் அளிக்கப்பட்ட பின்னா், வாக்களிப்பிற்கு 10 நாட்கள் எஞ்சியிருந்த நிலையில் MR குடும்ப ஆட்சியின் MS கூட்டணியின் பக்கம் தாவினீா்கள். தாவிய பின்னா் தான் கூட்டங்களில் முகம் காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து கடைசியில் MR ஐ விட MS கூட்டணியில் கூடிய செல்வாக்கு பெற்றுள்ளீா்கள் என்பதை மறக்க வேண்டாம்.
தோ்தல் காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம்கள், இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள், சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்கள் என்று பிரச்சார மேடைகளில் முழக்கம் போடும் நீங்கள் இப்போது வில்பத்து விவகாரத்தில் உள்ள மக்கள் முஸ்லிம்கள் அல்ல? என்ற நிலைப்பாட்டிலா! இருக்கின்றீா்கள்.
குறித்த வில்பத்து விவகாரம் அமைச்சா் றிஷாத் பத்தியுத்தீன் என்ற ஒரு தனிமனிதன் ஆளுமைக்கு உட்பட்ட நிலப்பகுதியின் தொடா்புபட்ட பிரச்சினை என்று நீங்கள் கருதுவதன் காரணமாக அமைதி காக்கின்றீ்ர்களா?. காய்த்த மரத்துக்குத்தான் கல்லடியும் பொல்லடியும் என்பார்கள். இப்படி மீடியாக்களில் இன்று அதிகம் பேசப்படும் ஒருவராக றிஷாத் பத்தியுத்தீன் அவா்கள் மாறி இருக்கின்றார் என்பதோடு முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையான அம்பாரை மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தோ்தலில் றிஷாத் பத்தியுத்தீன் தலைமையிலான ”மயில்” முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகளை வீழ்ச்சியடையச் செய்ய காத்திருக்கின்றது என்ற நற்செய்தியையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
அத்தோடு அசாத் சாலி அவா்களோ கடந்த பாராளுமன்றத் தோ்தலில் ஜனாதிபதி வேட்பாளா் மைத்திரிபால சிரிசேன அவா்களுக்கு ஆதவாக நீங்கள் செல்லாத முஸ்லிம் கிராமம் இல்லை என்று கருதுகின்றேன். ஒவ்வொரு முஸ்லிம்களாக நீங்கள் சென்று மைத்திரிக்கு வாக்களிக்கும் படி ஒவ்வொரு கலிமாச் சொன்ன முஸ்லிம்களை வேண்டிக் கொண்டீா்கள். அப்படியே முஸ்லிம் மைத்திரிக்கு வாக்களித்தார்கள். ஆனால் இப்போது முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை எனும் போது நீங்கள் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை. ஒரு மீடியா சந்திப்பை நடாத்தவில்லை. பிரச்சினைக்கு உட்பட்டுள்ள பகுதிக்குச் சென்று பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு தகுந்த தீா்வை எடுக்கும் தார்மீகப் பணியில் ஈடுபடவில்லை.
இலங்கை முஸ்லிம்களாகி நாம் சிறுபான்மையாக இருக்கும் போது எமது உரிமைகளை போராடித்தான் பெற வேண்டியுள்ளது. இது உலகில் உள்ள அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் பொருந்தும். அப்படி அனைவராலும் போராட முடியாது என்ற காரணத்தினால் தான் எமது பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அரசியல் வாதிகளை தோ்வு செய்து பாராளுமன்றத்துக்கு மாகாண சபைகளுக்கு மற்றும் அதிகாரம் மிக்க இடங்களுக்கு அனுப்புகின்றோம். அவா்கள் எமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு காலம் தாழ்த்தாது முடிவினை பெற்றுத் தரவேண்டும் என்பதே மக்களினது எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புக்களை இன்னமும் காலம் தாழ்த்தாது நிறைவேற்றுவீா்கள் என்ற ஆவாவுடன்.
ரூமி முஹம்மது முஜாஸ்