GuidePedia

லீ குவான் யூவின் மேற்கோள் கருத்து ஒன்றுடன் சமூக வலையத்தளங்கள் மூலம் பெருமளவில் அனுப்பப்பட்ட தனது புகைப்படம் குறித்து, தனக்கு எதுவும் தெரியாது என்றும் இவ்வாறான குழப்ப வேலைகளை சமூக வலைத்தளங்களில் யாரும் செய்ய முடியுமெனவும் கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
   
புத்த பெருமானை மேற்கோள் காட்டி யாரும் பேச முடியுமாயின் லீ குவான் யூவை ஏன் மேற்கோள் காட்ட முடியாது? எதுவும் சரியாக மேற்கோள் காட்டப்பட வேண்டும். உண்மையில் இதுபற்றி எனக்கு தெரியாது. இதை செய்தவர்களிடம் போய் கேளுங்கள். என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுபலசேனவில் இணையவுள்ளீர்களா எனக் கேட்டபோது அதுவும் பொய்தான் என அவர் கூறினார். எங்கும் கள்வர்கள் பற்றி கேள்விப்படுகின்றோம் அதேபோல் எங்கும் பொய் கூறப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.




 
Top