GuidePedia

மேற்கத்தைய நாடுகளுக்கு பொம்மையாக செயற்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மறுத்தார். எனினும் தற்போதைய ஜனாதிபதி மேற்குலக நாடுகளுடன் நட்புணர்வை பேணுகிறார் என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தித்தாள் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தின்போது இலங்கையை பொம்மையாக செயற்படுவதற்கே மேற்கத்தைய நாடுகள் முயற்சித்தன. எனினும் அதனை ஏற்காது செயற்பட்டமை காரணமாகவே விடுதலைப்புலிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் படையினரும் இணைந்து தோற்கடித்தனர்.
எனினும் இன்று கடந்த சில மாதங்களுக்குள் நிலைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
வடக்கில் இறந்துப்போன உறவுகளுக்காக நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படலாம்.
ஆனால் சில அமைப்புக்கள் விடுதலைப்புலிகளை நினைவுக்கூரும் வகையில் நிகழ்வுகளை நடத்துவதாகவும் ஹெகலிய ரம்புக்வெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.



 
Top