GuidePedia

பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொண்டதுடன், அமைப்புடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டுள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் பாதை தமக்கு பொருத்தமான வகையில் அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இன்று 20 may 015 வெளியான மவ்பிம சிங்கள பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
பதவி விலகுதல் தொடர்பில் விமலஜோதி தேரர், இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னதாக இயக்கத்தின் பொதுச் சபைக் கூட்டம் சுகததாச அரங்களில் நடைபெற்ற போது, பௌத்த பயங்கரவாதி என்றழைக்கப்படும் மியன்மாரின் விராது தேரரும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் தொடர்ந்தும் இயக்கத்தில் தலைமைப் பதவி வகிப்பது பொருத்தமாக இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அசின் விராது தேரரின் இலங்கை விஜயமானது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தியதாகவும், பௌத்தர்களின் நன்மதிப்பை குறைத்ததாகவும் தெரிவித்துள்ளார். சில நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே பொதுபல சேனா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
போலி பௌத்த பிக்குகளை இல்லாதொழிக்க, போலியாக பௌத்த மதத்தின் பெயரில் பணம் திரட்டுதல், மோசடி செய்வதனை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவே இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிகள் ஏற்கனவே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் இயக்கத்தில் இணைந்திருப்பதில் பயனில்லை என அவர் தெரிவித்துள்ளார். தற்போது பொதுபல சேனா இயக்கம் செல்லும் பாதையை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.



 
Top