GuidePedia

பாகிஸ்தான் கராச்சி நகரில் பேரூந்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களிற்காக இலங்கை அரசு ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இஸ்மாயிலி ஷியா முஸ்லிம்கள் பயணம் செய்த பேரூந்து மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 43 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி துப்பாக்கி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இலங்கை அரசு அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, பொதுமக்கள் மீதான இக்கொடூர மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இத்தாக்குதலானது சமய வழிப்பாடுகளிற்கு சென்றுகொண்டிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சமயம் நாங்கள் பாகிஸ்தான் அரசுக்கு உறுதுணையாக இருப்பதுடன் காயமடைந்தவர்கள் வெகுவிரைவில் குணமடைய வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றோம் என இலங்கை தன்னுடைய விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



 
Top