ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிலைக்கல்விப் பயிற்சி நிறுவனத்திலிருந்து வுர்ஐஆருN ( The Hague International Model United Nations) நிறுவனத் தலைவி லிசா மாட்டீன் அவர்களின் தலைமையில் மனித நேய கல்விப்பயிற்சி நிறுவன ஆசிரியர் பென் கீனன் அவர்கள் சர்வதேச மாணவ ஒன்றியத்தின் தலைவி மாக்கிரட் மைக்கல் இவர்களோடு 11 மாணவர்கள் அடங்கிய குழுவினர் கிழக்கிழங்கை சர்வதேசக் கல்லூரிக்கு விஜயம் செய்த நன்னாளாகும்.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பரிமாற்றத்தினூடாக இரு நிறுவனங்களும் இணைந்து விடயதானங்களை பரிமாறிக் கொள்ளும் உறுதிப்பாட்டை நிலை நிறுத்துவதே இவ்வருகையின் நோக்கமாகும்.
தகவல் தொடர்பாடல் பரிமாற்றத்தினூடாக மாணவர்களின் கல்வித் திறன்களை வழிநடத்துவதற்கும் இத்திறன்களை வளப்படுத்துவதன் மூலம் வாசிப்பத்திறன்களையும் அதனூடாக எழுத்தாற்றல் பேச்சாற்றல் ஆகியவற்றை நெறிப்படுத்துவதன் மூலமாக மாணவர்கள் வழிநடப்பப்படுவர். இந்த அடிப்படையில் அவர்கள் பயிற்றுவிக்கப்படுவதன் மூலம் ஒரு சிறந்த பிரஜையாக அவர்களது அறிவாற்றலை வளர்ப்பதற்கும் விரிவு படுத்துவதற்கும் இது ஒரு அரிய களமாக அமைந்துள்ளது. இதன் மூலம் தேசிய சர்வதேச ரீதியான தலைவர்களை உருவாக்குவதற்கு இந்த அமைப்பு முறை வடிவமைக்கப்படடுள்ளது. இத்தகைய ஒரு அரிய வாய்ப்பு எமது கிழக்கிழங்கை சர்வதேசக் கல்லூரி மாணவர்களுக்கு கிடைத்தமை பெருமைக்குறிய விடயமாகும்.