ஆப்பிள் வாட்ச் கருவிகளுக்கான முதல் அப்ளிகேஷனினை கூகுல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூகுள் நியூஸ் மற்றும் வெதர் அப்ளிகேஷன்களுக்கான அப்டேட் தான் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்த பல நிறுவனங்களும் தங்களது அப்ளிகேஷனினை பதிவு செய்ய துவங்கி விட்டன. கூகுள் நியூஸ் மற்றும் வெதர் அப்ளிகேஷன்கள் ஐஓஎஸ் இயங்குதளத்திற்கு புதிது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அப்ளிகேஷன் செயதிகளை சுமார் 65,000 பதிப்பகங்களில் இருந்து வழங்குவதோடு, தொழில்நுட்பம், விளையாட்டு, போன்ற பகுதிகளும் இருக்கின்றது. ஆப்பிள் வாட்ச் பதிப்பில் வாடிக்கையாளர்கள் தலையங்கத்தை சிறிய ஸ்கிரீனில் ஸ்வைப் செய்ய முடியும்.