(A.C.A. மிஸ்காத்)
இனவாதிகளாலும், இனவாத ஊடகங்களாலும் வில்பத்து சரணலாயம் என காட்டப்படும் சர்ச்சைக்குரியதாக மாற்ற முயற்சிக்கும் மன்னாரின் மறிச்சிக்கட்டி, பிரதேசத்துக்கு இன்றும் (14/05/2015) 04 பேரூந்துகளில் பிக்குமார்கள், ஊடகவியலாளர் போன்றோர் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கருத்துக் கூறிய, கரடிக்குழியை சேர்ந்த முசலிப் பிரதேச சபை உறுப்பினர் எம். சுபியான்,
இன்று எமது பிரதேச சபை கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது அவ்வேளை பகல் 04 பஸ்களில் பிக்குமார் செல்வதாக எமக்கு மக்களால் தகவல் கிடைத்ததும், தவிசாளர் உட்பட 09 உறுப்பினர்களும் மறிச்சிக்கட்டிக்கு சென்றோம். அங்கு வந்தவர்களை கண்ட மக்கள் பீதீயடைந்து காணப்பட்டனர்.
வந்தவர்களில் ஒரு பிக்கு அதுரலிய ரத்னதேரரின் பிரதிநிதியான ஆனந்தகுமார தேரர் ஆவார். இவர் எமது பிரதேச உறுப்பினர்களுடன் சுமுகமாக கதைத்தார். எனினும் அங்கு வந்தவர்களில் சிலர் 'அபய பூமி' 'தங்களுடைய நாடு, தங்களுடைய பூமி ' போன்ற வார்த்தைகளை பிரயோகித்தனர்.
எது எவ்வாறெனினும் 1923ம் ஆண்டு வெள்ளைக்காரர் காலத்தில் தந்த உறுதிப்பத்திரம் (ஒப்பு) எம்மிடம் இருந்தும் கூட, இன்று நாம் இனவாதிகளாளும், இனவாத ஊடகங்களாளும் நிம்மதியாக மீள்குடியேறி வாழமுடியாமல் தவிக்கிறோம் என்றார்.