GuidePedia

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷிக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவு, இன்று காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்த போதும், அவர் அங்கு ஆஜராகவில்லை என தகல் வெளியாகியுள்ளது.
காணி விவகாரம் ஒன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலே அவர் கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



 
Top