(க.கிஷாந்தன்)
அட்டனிலிருந்து கண்டி செல்லும் அனைத்து தனியார் பேரூந்துகளும் 31.05.2015 அன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டடுள்ளனர்.
30.05.2015 அன்று கண்டியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற தனியார் பேரூந்து ஒன்றினை கினிகத்தேனை அம்பகமுவ பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த சிலர் பேரூந்தை மறைத்து பேரூந்தில் இருந்த நடத்துனரை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
தற்போது நடத்துனர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்மந்தப்பட்ட விடயம் தொடர்பாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருந்த போதிலும் இதுவைர சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை என கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்படபோவதாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
எனினும் இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சந்தேக நபர்களை கைது செய்யவுள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.