GuidePedia

புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலை தொடர்பில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவி கொலை தொடர்பில் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இந்தக் கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். எனினும், விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இரத்தினபுரி கொட்டகதனவில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
அப்போது விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதா? வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு மற்றுமொரு நீதியும் அமுல்படுத்த முடியுமா?
முழு நாட்டிற்கும் ஒரே நீதி அமுல்படுத்தப்பட வேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கிருலப்பனையில் அமைந்துள்ள அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



 
Top