(க.கிஷாந்தன்)
நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கோட்டம் மூன்று தோன்பீல்ட் தமிழ் வித்தியாலயத்தில் அடிப்படை வசதிகள் இன்மையால் மாணவர்கள் கல்வி கற்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இப்பாடசாலையில் 80ற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் உள்ளதோடு 4 ஆசிரியர்கள் கடமையில் உள்ளனர்.
இக்கட்டிடம் 1914 ம் ஆண்டு கட்டப்பட்டதாகும் தற்போது நூறு வருடங்களை கடந்துள்ளது. பாடசாலையில் நீர் வசதி இல்லை, அத்தோடு மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானம் இல்லை, பாடசாலைக்கென மின்சாரம் இல்லைää தோட்ட நிர்வாக மின்சாரம் வழங்கினாலும் அது மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது பாடசாலையின் கூரை தகரம் ஓட்டையாக காணப்படுவதால் மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே வடிகின்றது. பாடசாலையை சுற்றி மரங்கள் காணப்படுவதால் காற்று வீசும் காலங்களில் வாதுகள் முறிந்து விழும் அபாய நிலை தோன்றியுள்ளது.
பாடசாலையின் கட்டிடம் வெடிப்புற்று இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது. அத்தோடு கதவு யன்னல்கள் உடைந்துள்ளது. கட்டிடம் சிறிதாக இருப்பதால் மாணவர்கள் இடையூர் இல்லாமல் அமர்ந்து படிப்பதுக்கு இடவசதி இல்லாமல் தடுமாறுகின்றனர்.
ஏனைய பாடசாலை மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்தோடு கல்வி கற்றாலும் இப்பாடசாலை மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் கற்;பது வேதனைகுறிய விடயமாகும்.
இப்பாடசாலை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புதிய கட்டிடம் நிர்மானிப்பதுக்கு மலையக அரசியல் வாதிகளிடம் பல முறை கோரிக்கைவிடுத்த போதிலும் இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகள் நடைபெறுகின்றமை குறிப்பிடதக்கது.