(க.கிஷாந்தன்)
பொலனறுவையில் 11 அடி உயரத்தில், கறி மிளகாய் செடியொன்று வளர்ந்துள்ளது.
அரலகவ்வில – ரத்மல்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டுத் தோட்டத்திலேயே இந்தச் செடி வளர்ந்துள்ளது.
இந்தச் செடியில் இதுவரை 70 காய்களை அறுவடை செய்துள்ளதாகவும், இன்னும் 30 காய்கள் செடியில் உள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த அபூர்வ மிளகாய் செடியை காண்பதற்கு, பலர் அப்பிரதேசத்திற்கு படையெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.