முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிதிமோசடி தவிர்ப்பு பொலிஸ் விசாரணைக்கு இன்று செல்லவுள்ளார்.
தம்மை கைது செய்ய முடியாது என்ற உறுதியுடன் கோத்தபாய இன்று செல்லவுள்ளார்.
ஏற்கனவே குறித்த பிரிவுப் பொலிஸார் தம்மை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் கோத்தபாய தமது விசாரணைக்கான திகதியை பிற்போடுமாறு கோரியிருந்தார்.
அதேநேரம் உயர்நீதிமன்றத்தில் குறித்த பொலிஸ் பிரிவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்து தம்மை நீதிமன்ற விசாரணை முடியும் வரை கைது செய்ய முடியாது என்று தீர்ப்பையும் பெற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் இன்று அவர் ஏற்கனவே அழைக்கப்பட்டதன்படி நிதி மோசடி தவிர்ப்பு பொலிஸ் விசாரணைக்கு செல்லவுள்ளார்.
மிக்-27 ரக விமானங்களை 2006ஆம் ஆண்டு அதிக விலைகளுக்கு கொள்வனவு செய்தமை மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல் பங்கு மோசடி உட்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைக்காகவே அவர் இன்று நிதிமோசடி தவிர்ப்பு பிரிவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.