GuidePedia

சில தரப்பினர் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தம்மீது பொதுமக்கள் கொண்டுள்ளதாக நம்பிக்கையை மழுங்கடிப்பதற்கு முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டுமக்கள் தமது பக்கம் இருப்பதாகவும், அவர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோமாகம பிரதேசத்;தில் ராணுவத்தினருக்கு ஆசீர்வாதம் அளிக்கும் வகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.

கடந்த 3 தசாப்த காலமாக முன்னெடுக்கப்பட்ட யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தமாக சிலர் சித்தரிக்கின்றார்கள்.

ஆனால் அது தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு தமக்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுக்க ஒரு சிலர் பிரயத்தனம் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 



 
Top