GuidePedia

கடந்த அரசாங்கத்தின் 60 முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பதவிகளை வகித்த 60 பேருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிதி மோசடி, ஊழல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது கிடைக்கப் பெற்றுள்ள விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சில முக்கிய அரசியல்வாதிகள், உயர் அரசாங்க அதிகாரிகளை கைது செய்ய நேரிடும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஞாயிறு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



 
Top