பிரதி அமைச்சர் நிரஞ்சன் விக்ரமசிங்கவின் மறைவினால் ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு ஆர்.டி.விமலதாச நியமிக்கப்படவுள்ளார்.
2010ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியிட்டிய நிரஞ்சன் விக்ரமசிங்க நேற்று சுகயீனம் காரணமாக காலமானார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதி அமைச்சராக விக்ரமசிங்க கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரமசிங்கவின் மறைவினால் நாடாளுமன்றில் ஏற்பட்ட வெற்றிடத்திற்குää 2010ம் ஆண்டில் குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட நிரஞ்சன் விக்ரமசிங்க 54572 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு கட்சிப் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றம் தெரிவானார்.
இந்த வரிசையில் ஆறாம் இடத்தை 46013 வாக்குகளைப் பெற்றக்கொண்ட ஏ.எம். முனிதாச பிரேமசந்திர பெற்றுக்கொண்டிருந்தார். எனினும் முனிதாச பிரேமசந்திரவும் தற்போது உயிருடன் இல்லை.
இதனால் 2010ம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 44728 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஆர்.டி. விமலதாச நாடாளுமன்றிற்கு தெரிவாகவுள்ளார்.
அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளின் போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.