ஜூன் மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றம் நிச்சயம் கலைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான சாதகமான சூழ்நிலை 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக உருவாகியுள்ளது.
20ம் திருத்தச் சட்டம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
எனினும் 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த போதியளவு கால அவகாசம் கிடைக்காத காரணத்தினால் புதிய நாடாளுமன்றில் சட்டத்தை நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய தேர்தல் திருத்த சட்டம் தொடர்பான நடவடிக்கைகளும் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகின்றது.