GuidePedia

நாட்டின் சட்டங்களுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக முடியாது என உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

செவனகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அன்று தோற்கடிக்க முடியாது என கூறிய மஹிந்த ராஜபக்சவை, கிராமத்திலிருந்து வந்த மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடித்துள்ளது.

இந்த நாட்டின் மாமன்னரை தோற்கடிக்க முடியாது என மேடைகளில் கோசம் எழுப்பியவர்களின் வாய்கள் மூடப்பட்டுள்ளன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் 15 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தேல்வியைத் தழுவுவார்கள் என்பது உறுதி.

தற்போது அறுபது வயதைத் தாண்டிய மஹிந்த பூக்கூடைகளை ஏந்தி விகாரைகளுக்கு சென்று வருகின்றார். அதனைத் தவிர நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவினால் நாட்டின் ஜனாதிபதியாக முடியாது.

எனவே, விஹாரைக்கு சென்று புண்ணியம் தேடிக் கொள்வது நல்லதே என அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.



 
Top