GuidePedia

மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் ஒரிஜினல் பதிப்பினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ள நிலையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இதன்படி கடந்த வாரம் விண்டோஸ் 10 இயங்குதளமே விண்டோஸ் தொடரின் இறுதி இயங்குதளமாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது விண்டோஸ் 10 இயங்குதளமானது ஒரே நேரத்தில் 7 வகையான பதிப்புக்களாக வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு சாதனங்களை அடிப்படையாகக் கொண்டு Home, Mobile, Pro, Enterprise, Education, Mobile Enterprise மற்றும் IoT எனும் 7 பதிப்புக்களாக இவ் இயங்குதளம் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top