GuidePedia

(கே.எம்.அன்சார்)பர்மா றோகிங்கிய முஸ்லிம்களைப் பாதுகாக்க அல்லாஹ்வே போதுமானவன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அமைச்சர் மன்சூர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பர்மா றோகிங்கிய முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனச் சுத்திகரிப்பு இன்று நேற்று கட்டவிழ்த்து விடப்பட்டது அல்ல அந்த அப்பாவி மக்களுக்கெதிராக பல காலமாக இனச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது அன்றிலிருந்து இன்று வரை ஐ.நா. சபையும் வாய் மூடியே இருக்கின்றது, அந்த அப்பாவி மக்கள் விடயத்தில் இன்னும் பாரபட்சமாகவே இருக்கின்றது.
பர்மா றோகிங்கியா முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு, தாய்மார்களுக்கு, சிறு குழந்தைகளுக்கு இவர்கள் எவரும் உதவி செய்யாவிட்டாலும் மகா கருணை உள்ள அல்லாஹ் இம் மக்களுக்கு என்றும் பாதுகாப்பாக இருப்பான், அந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியை மாத்திரமே நாம் எதிர்பார்க்க வேண்டும்.
தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள தப்பித்து வந்த மக்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள் அந்த நேரம் இம் மக்களுக்கு புகலிடம் அளிக்க தயக்கம் காட்டிய நாடுகள் இன்று அவர்களுக்கு புகலிடம் கொடுக்க இருப்பது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது அல்-ஹம்துலில்லாஹ்.
முஸ்லிம் காங்ரஸ் தலைவரும், அமைச்சருமாகிய கௌரவ றவூப் ஹக்கீம் அவர்கள் மியன்மார் விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒத்தி வைப்பு வேளை பிரேரணை ஒன்றைக் கொண்டு வரக் கோரியிருந்தார்கள் மேலும் இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மியன்மார் அகதிகளுக்குப் பொறுப்பான முன்னால் மலேசிய அமைச்சரோடும் கௌரவ றவூப் ஹக்கீம் அவர்கள் கலந்துரையாடியிருந்தார்கள் அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஆகிய நாம் அம்மக்களுக்காக ஐந்து வேளை தொழுகையிலும் அம் மக்களுக்காக, அம் மக்களின் விடிவுக்காக, பாதுகாப்புக்காக அல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேட வேண்டும் பர்மா றோகிங்கிய முஸ்லிம்களைப் பாதுகாக்க அல்லாஹ்வே போதுமானவன் ஆவான் எனவும் தெரிவித்தார்கள்.




 
Top