GuidePedia

அண்டை நாட்டினர் நேரில் கட்டியணைத்து, பின்னால் குத்துவார்கள்’ என பிரதமர் மோடியின் சீனப்பயணம் குறித்து சிவசேனா கருத்து கூறியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 14–ந்தேதி 3 நாட்கள் சுற்றுப்பபயணமாக சீனா சென்றார். பின்னர் மங்கோலியா நாட்டிற்கு சென்றார்.

இந்தநிலையில் பிரதமரின் சீனப்பயணம் குறித்து சிவசேனா தன் கட்சி பத்திரிக்கையான சாம்னாவின் தலையங்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

எங்களுக்கு கிடைத்த அனுபவத்தை பொறுத்தவரை சீனா நேரில் கட்டிணைத்து, பின்னால் குத்துவதில் நம்பிக்கை கொண்டது.


மேலும் ஒரு பக்கம் சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மறுபக்கம் இந்தியாவின் வரைப்படத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தையும், ஜம்மு காஷ்மீரையும் தூக்கி உள்ளனர். அருணாச்சல பிரதேசம், காஷ்மீர் இல்லா வரைப்படம் பிரச்சினையில் சீனா தன்னை மாற்றிக்கொள்ளாது என்பதை இந்தியா உணர்ந்து கொள்ளவேண்டும்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்தியா வரும்போது திபெத் இல்லாத சீன வரைப்படத்தை நாம் வெளியிட்டால் அந்த நாட்டு மக்கள் பொறுத்து கொள்வார்களா?. ஆனால் சீனாவுக்கு எதிராக நாம் நம் எதிர்ப்பை வெளிகாட்ட தைரியம் இல்லாமல் போனோம்.

பாகிஸ்தானுக்கு சீனா உதவி செய்து வருகிறது. சீனா, பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகளை தவிர ஆயுங்களையும், வெடி பொருட்களையும், அணு ஆயுதங்களையும், பணத்தையும் வழங்கி வருகிறது. பாகிஸ்தானிடம் எதுவும் இல்லை. அவர்கள் அனைத்திற்கும் சீனாவை மட்டுமே எதிர்பார்த்து உள்ளனர். இன்றும் சியாச்சின் மீது சீனாவின் பார்வை உள்ளது.

இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் சிவசேனா கூறியுள்ளது.



 
Top