மூன்று அனல் மின் உற்பத்தி நிலையங்களை இவ்வாண்டில் மூடவிருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவற்றின் உடன்படிக்கைகளின் மூலம் ஏற்பட்டுள்ள நட்டத்தைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை, புத்தளம் மற்றும் அம்பிலிபிட்டிய ஆகிய அனல் மின் உற்பத்தி நிலையங்களே மூடப்படவுள்ளன.
அந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கான அலகுக்கட்டணமாக வருடாந்தம் 3000 – 3500 மில்லியன் ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையை செலுத்த வேண்டியுள்ளமையே இதற்கு பிரதான காரணமாகும்.
களனிதிஸ்ஸ அனல் மின் உற்பத்தி நிலையம் மாத்திரம் தொடர்ந்தும் இயங்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.
எரிபொருள் இறக்குமதிக்காக கைச்சாத்திடப்பட்டிருந்த ஐந்து உடன்படிக்கைகளை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.