முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளாராக நிறுத்த முயற்சிப்போரால் நாடாளுமன்றத்தில் 113 பேரின் ஆதரவையாவது திரட்டிக்காட்ட முடியுமா? என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் மஹிந்த ஆதரவுக் குழுவினருக்கு சவால் விடுத்துள்ளார்.
|
சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்,மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனிவாவுக்குச் செல்வதனை தேசத் துரோகமாகக் கருதிய மஹிந்த ஆதரவுக் குழுவினர், ஊழல் மோசடி செய்தோரை கைது செய்கின்றமைக்காக தற்போது ஜெனிவா செல்ல நினைப்பது தேசத்துரோகம் இல்லையா?
நாட்டு மக்களின் ஆணையின் பிரகாரம் நாடாளுமன்றம் வெகுவிரைவில் கலைக்கப்படும்.இந்தப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதியானது என்றும் தெரிவித்துள்ளார்.
|