(றிப்கான் கே சமான்)
பொற்கேணி பாடசாலைக்கு பலஇலட்சம் ரூபா பெருமதியான நவீன ரக கணனி உபகரணங்களை ஹுனைஸ் பாறூக் எம்.பி வழங்கிவைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் அண்மையில் முசலி கல்விக் கோட்டத்திற்குற்பட்ட பொற்கேணி அ.மு.க பாடசாலைக்கு விஜயம் செய்து சகல வசதிகளுடன் கூடிய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நவீன ரக கணனிகளை பாடசாலை அதிபரிடம் கையளித்திருந்தார்.
இன்றய நவீன கால கட்டத்திற்கு கணனி கல்வி, தொழில் நுட்ப கல்வி இன்றியமையாததாகும் இதன் தெவைகளை கருத்தில் கொண்டே இந்த உபகரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் வழங்கிவைத்தார்.
பொருற்களை கையளிப்பதற்காக குறித்த பாடசாலைக்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு மாலை அணிவித்து பாரிய வரவேற்பு பாடசாலை மாணவர்களால் வழங்கப் பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் முசலி கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் முசலி கோட்டக் கல்வி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் உற்பட பெற்றோர்கள் , நலன் விரும்பிகள் என பெருந்திரலான மக்களும் இதில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கது.