20ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடல் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், தேர்தல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் அரசியல் கட்சி, கண்கானிப்பாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிகம் பேசப்படுகின்ற 20ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
இதேவேளை இக்கலந்துரையாடலில் 20ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் யோசனைகள் முன்வைப்பதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இறுதி முடிவு எட்டக்கூடும் என சிவில் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.