GuidePedia

தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலே தாம் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுத்ததென, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தமது பதவி விலகல் குறித்து அறிவிக்குமுகமாக கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
தமது பதவி விலகல் குறித்து தொடர்ந்தும் விளக்கமளித்த நாடாளுமன்ற உறுப்பினர்-
ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் என்ற போர்வையில் அரசியல் பழிவாங்கல்களே இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் இவ்வாறான செயற்பாடுகளை, தொடர்ந்தும் பொறுத்துக்கொள்ள முடியாது.
எனவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 26 அமைச்சர்களும் விரைவில் வெளியேறுவோம். எனினும் நாம் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவோம்.
அதேபோல், உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டமைக்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம்.
காரணம் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டுள்ளதால், தற்போது அதன் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன’ என அவர் மேலும் தெரிவித்தார்.




 
Top