முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நீதித்துறையின் சுதந்திரத்தை பாராட்டியுள்ளார். தன்னை கைதுசெய்வதற்கு எதிராக தான் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் புதன்கிழமை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்தே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
உண்மைக்காக துணிந்து நின்ற நீதித்துறைக்கு நான் தலை வணங்குகின்றேன், என அவர் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.அவர் தனது வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்
நான் ஒரு அரச ஊழியன்,எனது கடமையை என்னால் முடிந்தளவிற்கு மிகச்சிறப்பாக செயற்படுவதே எனது நோக்கம்,என அவர் குறிப்பிட்டுள்ளார்.