GuidePedia

(க.கிஷாந்தன்)
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெட்சுமி தோட்ட கீழ் பிரிவில் 19.05.2015  அன்று மாலை 3.30 மணியளவில் குளவி கொட்டியதால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலைப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்வர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் 13தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு மிகுதி 08 தொழிலாளர்கள் தொடர்ந்தும் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதில் 3 பேர்க்கு படுங்காயங்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நோர்வ10ட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டொக்கம் தோட்டத்தில் 3 தொழிலாளர்கள் 19.05.2015 அன்று 3 மணியளவில் குளவி கொட்டுக்கு இழக்காகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.








 
Top