அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான ஆர்வம் முஸ்லிம் சமூகத்திடம் காணப்பட்ட போதிலும் வாக்காளர் இடாப்பில் தமது பெயர்களை பதிந்துகொள்ளும் ஆர்வம் குறைவாகவே இருப்பதாக மத்திய கொழும்பு ஐக்கியதேசிய கட்சியின் பிரதான அமைப்பாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மருதானைஇ சுதுவெல பகுதியில் இடம்பெற்ற கட்சியின் தொகுதி ஆதரவாளர்களை சந்திக்கும் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்காண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்இ கடந்த 15 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிந்துகொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமானது. எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவிருக்கும் இப்பதிவு நடவடிக்கைகளில் முஸ்லிம் சமூகத்தினர் ஆர்வம் மந்தப்போக்காகவே காணப்படுகின்றது.
வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துவதன் முழுமையான பயனை கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டனர். அத்தேர்தல் 2012 ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையிலேயே இடம்பெற்றது. இந்த தேர்தலின்போது குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதிகமான முஸ்லிம்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்திருந்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்கள் பழைய விகிதாசார முறையில் நடைபெறுமா? அல்லது புதிய கலப்பு முறையில் நடைபெறுமா? என்கிற சந்தேகம் காணப்படும் நிலையிலேயே தற்போது வாக்காளர் இடாப்புப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.
இதில் முஸ்லிம்கள் ஆர்வமின்றி இருப்பதானது எதிர்கால அரசியல் பிரதிநிதித்துவத்தை பெருவாரியாக பாதிக்கும். இது தொடர்பில் சமூகத்தை விழிப்புணர்வூட்டுமாறு தேசிய சூறா கவுன்ஸில் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஆகியன வலியுறுத்தியுள்ளன.
குறிப்பாகஇ இப்பதிவுகளுக்கான விண்ணப்பங்களை கிராம சேவகர் விநியோகிக்க வேண்டும். ஆனால் அந்நடவடிக்கை சீராக இடம்பெறுவதில்லை. எனவே நாம் ஆர்வத்துடன் சென்று கிராம சேவகரிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று உரிய முறையில் பூர்த்திசெய்து அவற்றை அவரிடம் ஒப்படைக்கவேண்டும்.
இம்முறை மிகக் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையால் அனைவரும் ஆர்வத்துடன் வாக்காளர் இடாப்பில் தமது பெயர்களை பதிந்து முஸ்லிம் சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.