GuidePedia

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சி பொது அணி ஒன்றை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கான சின்னம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல கட்சிகள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட விருப்பம் வெளியிட்டுள்ளன.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி கூட்டணிக்கு அன்னம் சிறந்த சின்னமாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சி கூட்டணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் 113 ஆசனங்களில் வெற்றிபெறும் என்று அஜித் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.



 
Top