GuidePedia

தாங்கள் வகிக்கும் பதவிகளை யாருக்கு வேண்டுமென்றாலும் எந்தவொரு பதவியில் இருந்தும் இராஜினாமா செய்து கொள்ள முடியும் எனவும், நான்கு அமைச்சர்களின் பதவி விலகலானது அவர்கள் இந்த அரசாங்கத்தின் பங்குதாரர்கள் இல்லை என்பதையே காட்டுவதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
வெளி விவகார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் உறுப்பினர்களின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு தனக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாதென அவர் கூறியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஐக்கிய தேசியக் கட்சி முழுமனதுடன் இருந்து செயற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது ஒரு சிறுபான்மை அரசாங்கம் என்பதனால் யார் விலகிச் சென்றாலும் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



 
Top